ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ----2
ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் ----2
--- ஆராதனை
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசுவிலே -2
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் ---2
- ஆராதனை
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே ---- 2
முழங்கால் யாவுமே முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே - --- 2
--- ஆராதனை
3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ----2
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் --2
--- ஆராதனை
Friday, 3 May 2019
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment